என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாவூர்சத்திரத்தில் பள்ளி அருகே குட்கா விற்ற 2 பேர் கைது
  X

  பாவூர்சத்திரத்தில் பள்ளி அருகே குட்கா விற்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளி மாணவர்களுக்கு குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
  • அரசு பள்ளி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மிக்கேல் சவரிமுத்து மற்றும் காண்டீபன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  தென்காசி:

  பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது அரசு பள்ளி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மரியதாய்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த மிக்கேல் சவரிமுத்து(38)மற்றும் பெத்தநாடார்பட்டி கஸ்பா தெருவை சேர்ந்த காண்டீபன் (55 )ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 30 கிலோ எடை கொண்ட 2 மூட்டை குட்கா புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×