சங்கரன்கோவில் அருகே மது கடத்திய 2 பேர் கைது

சப் -இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.மது பாட்டில்கள் கடத்திய சண்முகராஜ், சவுந்தர பாண்டியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Sankarankovil,Arrest,Liquor Bottles,Seized,
Sankarankovil,Arrest,Liquor Bottles,Seized,
Published on

நெல்லை:

சங்கரன்கோவிலை அடுத்த அய்யாபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்களை சோதனை செய்ததில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 100 மது பாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து களப்பாக்குளத்தை சேர்ந்த சண்முகராஜ் (வயது 29), சவுந்தர பாண்டியன் (35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com