டெல்லி சுகாதாரத்துறை மந்திரி உடல்நிலையில் முன்னேற்றம்: பொது வார்டுக்கு மாற்றம்

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து ஆபத்தான நிலையில் இருந்த நிலையில், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்
Published on

டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 17-ந்தேதி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. ஆக்சிஜன் உதவி வழங்கப்பட்டது.

உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தினால் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததால் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு அளித்து வந்த ஆக்சிஜன் உதவி நீக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com