வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வங்காளதேசம் தொடர் ஒத்திவைப்பு
பாகிஸ்தான் வங்காளதேசம் தொடர் ஒத்திவைப்பு
Published on

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 29-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்க அந்நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தது.

அதேபோல், ஏப்ரல் 5-ம் தேதி இரு அணிகளும் பங்கேற்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் நடைபெற இருந்தது.  ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன.

ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வருகிற 24-ந்தேதி தொடங்க இருந்து உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் கோப்பை ஒருநாள் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com