அண்ணா அறிவாலய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தாக்கத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியத்துக்கும்(வயது 61) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் இருந்து அண்ணா அறிவாலயம் வந்த மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com