கொரோனா பீதியால் புதுச்சேரியில் முகக்கவசம் தட்டுப்பாடு

கொரோனா வைரஸ் பீதியால் புதுச்சேரியில் முகக்கவசத்தை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி செல்வதால் பல மருந்துகடைகளில் அதற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
முகக்கவசம்
முகக்கவசம்
Published on

புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது. இருமல், தும்மல் உள்ளவர்கள் முகக் கவசம் (மாஸ்க்) அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது பலர் முகக்கவசம் அணிந்தே செல்கின்றனர். மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் பலர் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்துள்ளதை காண முடிகிறது. திடீர் கிராக்கியால் தற்போது முகக்கவசத்தின் விலையேறி உள்ளது. சாதாரணமாக ரூ.5-க்கு விற்கப்படும் முகக்கவசம், தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவண்ணம் காத்திட என்-95 முகக்கவசம் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இது ரூ.250 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. முகக்கவசத்தை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி செல்வதால் பல மருந்துகடைகளில் அதற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com