காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாநகர, மாவட்ட தே.மு.தி.க சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகர, மாவட்ட தே.மு.தி.க சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர, மாவட்ட செயலாளர் முகமதுஅலி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் சிவநேசன் முன்னிலை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் தே.மு.தி.க.வினர் கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com