

மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பான பிரச்சாரங்களையும், தேர்தல் வேலைகளையும் காங்கிரஸ் மற்றும் பாஜக துவங்கிவிட்டன.
இன்று ஆதிவாசி எக்தா பரிஷத் என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஆதிவாசிகளுக்கான சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். மேலும், தான் 2004-ம் ஆண்டு முதல் அரசியலில் இருப்பதாகவும், எப்போதாவது ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன் என பொய் வாக்குறுதி அளித்தது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீரவ் மோடி நமது பணமான 35 ஆயிரம் கோடி ரூபாயை திருடிவிட்டு வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும், விஜய் மல்லையாவோ 10 ஆயிரம் கோடியை திருடிவிட்டு நிதிமந்திரியிடம் சொல்லிவிட்டே வெளிநாடு சென்று ஒளிந்துகொண்டதாகவும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.