உளுந்தூர்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் நியமனம்

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியமாக அ.தி.மு.க. பிரித்துள்ளது. மேலும் உளுந்தூர்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு ஒன்றிய செயலாளர்களையும் நியமனம் செய்துள்ளது.
மணிராஜ் - பழனிவேல்
மணிராஜ் - பழனிவேல்
Published on

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியமாக அ.தி.மு.க. பிரித்துள்ளது. மேலும் உளுந்தூர்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு ஒன்றிய செயலாளர்களையும் நியமனம் செய்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளராக வக்கீல் மணிராஜை நியமனம் செய்துள்ளனர். 

இதேபோல் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேலை தற்போது உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்து அறிவித்துள்ளனர். இதையடுத்து ஒன்றிய செயலாளர்கள் 2 பேரையும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com