மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ல் திமுக செயற்குழு கூட்டம் - க.அன்பழகன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அன்பழகன்
அன்பழகன்
Published on

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.

இந்த கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி களுக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்தச் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com