

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு கோடை விடுமுறையையொட்டி சிறப்பு வகுப்புகள் நடத்தபடுகின்றன.
இதற்காக பள்ளி பஸ் இன்று காலை 25-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை ஏற்றி வந்தது. பள்ளி அருகே வந்தபோது டிரைவர் கட்டுபாட்டை இழந்த பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மாணவ-மாணவிகள் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கலெக்டர் கந்தசாமி முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இத்துக்கு சென்று காயமடைந்த 8 மாணவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதையும் மீறி சிறப்பு வகுப்பு வைக்கப்பட்டிருந்ததால் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக கல்வி அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். #tamilnews