பட்டாசு வெடித்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது

ராயக்கோட்டை அருகே வீட்டின் முன்பு பட்டாசு வெடித்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பழையவூர் கூட் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி வள்ளி (வயது 42). ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 26-ந் தேதி தனது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்பெண்டர் வினோத்குமார் (22), தனியார் கம்பெனி தொழிலாளிகளான விஜய் (23), மணி (22) ஆகியோர் அவ்வழியே வந்துள்ளனர். அப்போது இங்கு பட்டாசு வெடிக்க கூடாது என கூறி மிரட்டியுள்ளனர். 

இது குறித்து வள்ளி நேற்று ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து, வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com