

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் கலவை - ஒரு கப்,
வெங்காயம் - 1
தக்காளி - 1,
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
புதினா - ஒரு கைப்பிடி,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
ஆறிய பிறகு மூடியை திறந்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைத்து சூடாக பருகலாம்.