மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

மழைக்காலத்தில் ஈரத்தினால் ஏற்படும் பூஞ்சை பாக்டீரியாக்களால் பிரச்சனைகள் வராமலிருக்க பாதத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Published on

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சின்ன சின்ன வழிமுறைகள் தான். பூஞ்சைத் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க, உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாக துடைக்கவும்.

கால் நகங்களை வெட்டுங்கள். கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். சரியான காலணிகளை அணியுங்கள் ஷூக்கள் போட்டு மழை நீரில் நடக்கும் போது ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கேன்வாஸ் ஷூக்கள் போடுவதைத் தவிருங்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com