

இன்சுலின் என்பது கணையத்தில் உள்ள 'பீட்டா' செல்களால் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும்.இந்த இன்சுலின் என்பது, நாம் உணவை உட்கொண்டு, அது செரிமானம் அடையும்போது, அது சர்க்கரையாக (குளுகோஸ்) மாற்றப்படுகிறது.
மேலும் இன்சுலின் என்பது, சர்க்கரை மூலக்கூறுகள் உடலின் செல்களுக்குள் நுழைய உதவும் ஒரு 'சாவி' போன்றது. இது செல் சுவரின் கதவுகளை திறந்து விடுகிறது. சில காரணங்களால் உடலின் செல்களுக்குள் இன்சுலின் நுழைய முடியாத எதிர்ப்பு தன்மை ஏற்படுகிறது. இதைத்தான் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்கின்றனர். அதாவது, செல்களின் மேற்பரப்பில் உள்ள 3 ஏற்பிகள், இன்சுலினுக்கு சரியாக பதில் அளிப்பது இல்லை. இதனால் சர்க்கரை மூலக்கூறுகள் உடல் செல்களுக்குள் நுழைய முடிவதில்லை. அவை ரத்த ஓட்டத்தில் தேங்கி நிற்கின்றன. இதுவே ரத்த சர்க்கரை அளவு உயர்வதற்கு காரணமாகிறது.
இது போன்ற ஒரு நிலை ஏற்படக்காரணம். குடும்பத்தில் நீரிழிவு நோய் வரலாறு இருத்தல், உடலில் ஹார்மோன் சமநிலை இல்லாமல் போவது, உடல் உழைப்பு இன்மை போன்றவை ஆகும். உடலில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உருவாகும்போது, அதீத தாகம் அல்லது பசி, உடல் எடை அதிகரிப்பு, கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு, அதீத சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும்.
அன்றாட உடற்பயிற்சி, சத்தான உணவு, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, நல்ல தூக்கம், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இன்சுலின் எதிர்ப்பு தன்மையை சீராக்க முடியும் என்கிறார்கள், டாக்டர்கள்.