கால்சியம் சத்து நிறைந்த தினை நட்ஸ் லட்டு

தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.
கால்சியம் சத்து நிறைந்த தினை நட்ஸ் லட்டு
Published on

தேவையான பொருட்கள் :

தினைமாவு - ஒரு கப்

நெய் - 1/2 கப்

நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - 1/2 கப்

நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்

செய்முறை :

வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து இலேசாக வறுத்து எடுக்கவும்.

பின்பு தினைமாவை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

அதனுடன் நாட்டுச் சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்து கைகளால் உதிர்த்து இலேசாக பிசிறவும்.

பிறகு சூடான நெய் விட்டு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

இப்போது சுவையான தினை நட்ஸ் லட்டு ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com