search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இட்லி மீந்து விட்டதா? கவலைய விடுங்க... சூப்பரான டிபன் செய்யலாம்...
    X

    இட்லி மீந்து விட்டதா? கவலைய விடுங்க... சூப்பரான டிபன் செய்யலாம்...

    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    இட்லி - 5,

    கடலைமாவு - சிறிதளவு,

    பெரிய வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    சீரகம் - சிறிதளவு,

    மிளகாய்தூள் - சிறிதளவு,

    உப்பு - சுவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு,

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும்.

    இட்லி துண்டுகளின் மேல் இந்தக் கடலைமாவுக் கலவையை சிறிதளவு தூவிப் பிசறி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான 'இட்லி 65' ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×