ரத்த அழுத்தம் கொண்டவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாமா?

இளநீரில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கிறது. அதனால் உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை அகற்றவும், ரத்த நாளங்களைத் தளர்த்தவும் உதவும்.
ரத்த அழுத்தம் கொண்டவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாமா?
Published on

இளநீரில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு இளநீர் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஏனெனில் இளநீரில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கிறது. அதனால் உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை அகற்றவும், ரத்த நாளங்களைத் தளர்த்தவும் உதவும். அதன் காரணமாக ரத்த அழுத்தம் குறையக்கூடும்.

அதேவேளையில் ரத்த அழுத்தத்திற்கான மருந்துக்கு மாற்றாக இளநீரை கருதக்கூடாது. இளநீரை அதிகம் உட்கொள்வதும் ஆபத்தானது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சுமார் 300 மி.லி. முதல் 500 மி.லி. வரை இளநீர் பருகுவது பாதுகாப்பானது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

எனினும் ரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்றே இளநீர் பருகும் அளவை தீர்மானிக்க வேண்டும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com