இன்று சனி பிரதோஷம்: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம்

இன்று முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலை ஏற அனுமதி அளித்திருந்தது.சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இன்று சனி பிரதோஷம்: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம்
Published on

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர லிங்கம், சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாசி மாத பவுர்ணமி மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (4-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலைஏற வனத்துறை அனுமதி அளித்திருந்தது.

இன்று சனிபிரதோ ஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிபாறையில் குவிந்தனர். காலை 7 மணிக்கு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

10 வயதிற்குட்பட்ட வர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சனிபிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com