search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் சுப்ரபாத சேவை
    X

    திருப்பதி கோவிலில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் சுப்ரபாத சேவை

    • டிசம்பர் மாதம் 16-ந் தேதி மாலை மார்கழி மாதம் தொடங்கியது.
    • ஒரு மாதமாக சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாசுர பாராயணம் நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தை தவிர மற்ற மாதங்களில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் சுப்ரபாத சேவைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி மாலை மார்கழி மாதம் தொடங்கியது. மார்கழி மாதம் தொடங்கியதையொட்டி 17-ந் தேதி அதிகாலை முதல் நேற்று முன் தினம் அதிகாலை வரை கடந்த ஒரு மாதமாக சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாசுர பாராயணம் நடந்தது.

    நேற்று முன்தினம் மார்கழி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று அதிகாலை சாமிக்கு மீண்டும் சுப்ரபாத சேவை நடந்தது.

    திருப்பதியில் நேற்று 76,307 பேர் தரிசனம் செய்தனர். 29,573 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×