கார்த்திகை மாதம் விளக்கேற்ற நல்ல நேரம்

தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும். திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதம் விளக்கேற்ற நல்ல நேரம்
Published on

கார்த்திகை மாதம் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக சூரிய உதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30 முதல் 6 மணிக்குள்) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.

மாலையில் தீபம் ஏற்றினால் திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மாலையில் வீடு முழுக்க விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகளுக்கு குறையாமல் ஏற்றுவதால் நிறைவான பலன்களைப் பெறலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com