search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 8-ந்தேதி நடக்கிறது
    X

    ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில்.

    ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 8-ந்தேதி நடக்கிறது

    • ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • வைஷ்ணா தேவி கோவிலுக்கு செல்லும் ஜம்மு - கட்ரா வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    ஜம்முவில் உள்ள மசீன் கிராமத்தில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஆய்வுசெய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொலைதூரத்தில் இருந்து திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. உபகோவில்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.

    இக்கோவிலில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை விக்கிரக பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறும். 8-ந்தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும். மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கான இலவச தரிசனம் தொடங்கும்.

    வைஷ்ணா தேவி கோவிலுக்கு செல்லும் ஜம்மு - கட்ரா வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது. நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதாகவும், இங்கு 24 மணி நேரம் நிரந்தரப் பாதுகாப்பு வழங்குமாறு ஜம்மு அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    தர்மபிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து முக்கிய பகுதிகளிலும் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் சமீபத்தில் சென்னை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், அமராவதி மற்றும் பிற பகுதிகளில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மும்பையில் விரைவில் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்படும். அதேபோன்று அகமதாபாத் மற்றும் ராய்ப்பூரில் கோவில்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×