search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் பும்ரா ஆடுவது சந்தேகம்
    X

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் பும்ரா ஆடுவது சந்தேகம்

    • ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது.
    • அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா.

    30 டெஸ்டில் 128 விக்கெட்டும், 72 ஒருநாள் ஆட்டத்தில் 121 விக்கெட்டும், 60 இருபது ஓவர் போட்டியில் 70 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.

    29 வயதான பும்ரா காயத்தால் சர்வதேச போட்டியில் தொடர்ந்து ஆட முடியாத நிலையில் உள்ளார். அவர் கடைசியாக டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் ஜூலை மாதமும், 20 ஓவரில் செப்டம்பர் மாதமும் விளையாடி இருந்தார்.

    காயத்தில் இருந்து முழு குணம் அடைந்ததால் இலங்கைக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைய இந்தியாவுக்கு இந்த தொடர் முக்கியமானது. பும்ரா இல்லாமல் போனால் பாதிப்பு இருக்கும்.

    இதனால் அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் 9-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 13-ந்தேதி டெஸ்ட் தொடர் முடிகிறது. அதன்பிறகு ஒருநாள் தொடர் மார்ச் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது.

    Next Story
    ×