search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பேட்டர்கள்தான் தோல்விக்கு காரணம்- டோனி கருத்து
    X

    பேட்டர்கள்தான் தோல்விக்கு காரணம்- டோனி கருத்து

    • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • கேப்டனாக 200-வது போட்டி போன்ற சாதனை நிகழ்வுகளை தான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. போட்டியின் இறுதியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார். எம்.எஸ்.தோனி 32 ரன்களும், தொடர்ந்து ரகானே31 ரன்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ரன்களும், அலி 7 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும், ராயுடு ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த நிலையில், ராஜஸ்தான் உடனான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு சென்னை அணி கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மைதானம் பெரிய அளவில் ஸ்பின்னர்களுக்கு உதவவில்லை. ராஜஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக் ரொடேட் செய்யாததே தோல்விக்கு முக்கிய காரணம். பேட்டர்கள்தான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். கேப்டனாக 200-வது போட்டி போன்ற சாதனை நிகழ்வுகளை தான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அணிக்கு பங்களிப்பதுதான் முக்கியம்.

    என்று டோனி தெரிவித்தார்.

    Next Story
    ×