டொவினோ தாமஸ் நடித்த நரிவேட்டை படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும்.
டொவினோ தாமஸ் நடித்த நரிவேட்டை படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
Published on

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும். இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com