பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியுடன் இணையும் விஜய் சேதுபதி?

இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்து இருந்தார். ‘ஜெயிலர்2’ படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது.
பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியுடன் இணையும் விஜய் சேதுபதி?
Published on

இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்2'. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

'ஜெயிலர்' முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து பிற நடிகர்களின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

சமீபத்தில் 'ஜெயில் 2' படத்தின் தனது படப்பிடிப்பை முடித்ததாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, 'ஜெயிலர்2' படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும், இத்தகவல் தொடர்பாக விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினரிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 'ஜெயிலர் 2 ' படத்தில் விஜய்சேதுபதி இணைவது உண்மையானால், கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாக இது இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com