

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் தமிழன் படத்தில் நடித்த நிகழ்வுகளை குறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள அவர், “நான் முதன் முதலில் தமிழில் நடித்த படம் தமிழன் தான். இந்த படத்திற்காக தமிழ் உச்சரிப்புகளை படித்து புரிந்து கொள்வதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன்.
தமிழில் என்னுடன் நடித்த முதல் ஹீரோ விஜய் தான். அவர் அந்த காலகட்டத்திலேயே மிகவும் பிரபலமானவராக இருந்தார். படப்பிடிப்பு நிகழ்ந்த இடத்தில் அவரை காண்பதற்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள்.
அவர் பேசினாலும், சிரித்தாலும், நடனம் ஆடினாலும் அதை காண்பதற்கு ரசிகர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள். நான் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கிறேனா என்று எனக்கு ஒரு நிமிடம் குழப்பமே வந்துவிட்டது.
அந்த நிகழ்வை பார்த்தபோது எனக்கு ஒரு கடவுளை தரிசித்ததை போன்ற உணர்வை ஏற்படுத்தியது” என்று கூறியுள்ளார். மேலும் எனது அம்மா, விஜய் அவர்களை ஒரு ஜென்டில்மேன் என்று கூறியதாகவும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்.