இது முன்னரே நடந்திருக்க வேண்டும்...ரஜினியும் நானும் ஒன்றாக நடிக்கிறோம் - உறுதி செய்த கமல்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் கூலி.
இது முன்னரே நடந்திருக்க வேண்டும்...ரஜினியும் நானும் ஒன்றாக நடிக்கிறோம் - உறுதி செய்த கமல்
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி யில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்ற தகவல் அண்மையில் வெளியானது.

சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். அவர் அதில் கூறியதாவது "நாங்கள் இருவரும் இணைந்து எப்பவோ நடித்திருக்க வேண்டும். வியாபாரம் ரீதியாக நாங்கள் சேராமல் இருந்தோம். இப்பொழுது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com