Thangarathinamey | செல்வராகவன் படத்தின் புது அப்டேட் - வெளியான சூப்பர் வீடியோ

மனிதன் தெய்மாகலாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
Thangarathinamey | செல்வராகவன் படத்தின் புது அப்டேட் - வெளியான சூப்பர் வீடியோ
Published on: 

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் `மனிதன் தெய்வமாகலாம்' என்ற படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். விஜயா சதீஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. `மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், மனிதன் தெய்வமாகலாம் திரைப்படத்தின் "தங்க ரத்தினமே" பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் வரிகளை மு வி எழுதி இருக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.கே. ப்ரியன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ரவி வர்மா மேற்கொள்ள, தீபக் எஸ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்திற்கு பாக்கியராஜ் வெள்ளையன் கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com