கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 'தலைவர் 173' தலைப்பு குறித்து மாஸ் அப்டேட்

இதில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 'தலைவர் 173' தலைப்பு குறித்து மாஸ் அப்டேட்
Published on

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் ‘தலைவர் 173’ மூலம் மீண்டும் இணைகின்றனர்.

படத்தில் பிரபல இயக்குநர் மிஸ்கின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தலைவர் 173 படத்தின் தலைப்பு நாளை (ஜூன் 24) காலை 10 மணியளவில் வெளியாகும் என ராஜ்கமல் பிலிம்ஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com