

நடிகர் விஷால் தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலையை பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "டியர் விஜய் நீங்கள் தான் அரசமைக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது. ஒரு வாக்காளராக நான் இதை பதிவு செய்து கொள்கிறேன்.
தமிழக சட்ட பேரவை தேர்தலின் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியான நிலையில், தவெக 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் 10 எம்.எல்.ஏ க்கள் தேவைப்படும் நிலையில் இன்னும் தவெக ஆட்சி அமைக்காமல் இருப்பதில், திமுக - அதிமுக கூட்டணி அமைக்க போவதாக செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தவெக தலைவர் ஆட்சி அமைக்காவிட்டாலும் பரவாயில்லை. திமுக - அதிமுக கூட்டணி அமைந்தால் யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலை எல்லாம் நிலவும். அது மட்டுமல்ல நினைக்கமுடியதா அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் அசம்பாவிதம் நடக்கும். அது யாருக்குமே நல்லதல்ல.
பொதுமக்களும் வாக்களர்களும் பேரழிவை சந்திக்க நேரிடும். இதேபோல் 2017/18 ஆம் ஆண்டு கோவா, மணிப்பூர், மேகலாயா குறிப்பாக கர்நாடகத்திலும் இதுபோன்ற சூழ்நிலையிலும் முதலில் அரசாங்கம் அமைத்து பின்னர் சட்டசபையில் நிற்க வேண்டுமென இருந்தது.
ஆனால் இப்பொது தளபதி விஜய்க்கு ஏன் அரசமைக்க ஆளுநர் மறுக்கிறார்? வாக்களித்த மக்களுக்கு என்ன மரியாதை தருகிறது?? ஆட்சி அமைக்க ஏன் இவ்வளவு தாமதம்?.
தவெக பெரும்பான்மையாக வெற்றியில் இருக்கும் நிலையில் ஆளுநர் அளமுடியாது. இந்த அடிப்படையான உரிமைகள் அரசியல்வாதிகளுக்கும், மிக பெரிய சக்தியான தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.