நடிகர் விஜய்க்கு பரிசு.. வி.ஜே.ரம்யா வழங்கிய புத்தகம்..

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் ரம்யா.இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
ரம்யா -விஜய்
ரம்யா -விஜய்
Published on

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான ரம்யா சுப்ரமணியன் தன் பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

ரம்யா எழுதிய புத்தகம்

இவர் தற்போது உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சமீபத்தில் இதனை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரம்யா நடிகர் விஜய்யை சந்தித்து தான் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com