விஜய்யின் தெறி டான்ஸ்.. வெளியான செலிபிரேஷன் ஆஃப் வாரிசு வீடியோ..

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’.இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
வாரிசு
வாரிசு
Published on

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' இன்று திரையரங்குகளில் வெளியானது.

வாரிசு

இந்நிலையில், 'வாரிசு'படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் செலிபிரேஷன் ஆஃப் வாரிசு (celebration of varisu) வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com