என் மலர்
சினிமா செய்திகள்

வாரிசு
வாரிசு படத்தின் 50வது நாள் கொண்டாட்டம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
- விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
50 வது நாளில் வாரிசு திரைப்படம்
இந்நிலையில், 'வாரிசு' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளதை ரசிகர்கள் இணையத்தில் போஸ்டர்கள் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். மேலும் சில திரையரங்குகளில் ரசிகர்கள் விஜய்யின் போஸ்டர்களுக்கு மாலை அணிவித்து கொண்டாவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான ஹாஷ்டாக்குகளையும் இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.
இப்படம் பிப்ரவரி 22-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.






