ரஜினியிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்.. வைரலாகும் புகைப்படம்..

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2. சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்கவுள்ளது.
ரஜினி - ராகவா லாரன்ஸ்
ரஜினி - ராகவா லாரன்ஸ்
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.

சந்திரமுகி 2

அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

ரஜினி - ராகவா லாரன்ஸ்

இந்நிலையில், 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்கவுள்ளது. இதையடுத்து ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com