நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.இவரின் உடலுக்கு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Published on

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். 85 வயதான சுப்பிரமணியம் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com