காஷ்மீரில் கலக்கும் 'லியோ'.. புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் 'லியோ'.இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லியோ
லியோ
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ படக்குழு

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ படக்குழு

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் 'லியோ' படக்குழு காஷ்மீருக்கு சென்றது. இந்நிலையில், காஷ்மீரில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ்மேனன் மற்றும் பலர் உள்ளனர். இந்த புகைப்படத்திற்கு மரண வெயிட்டிங் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com