இணையத்தில் லீக்கான காட்சி.. விஜய் படக்குழு எடுத்த அதிரடி முடிவு..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லியோ
லியோ
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ படக்குழு

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் 'லியோ' படப்பிடிப்பில் விஜய் நடித்த காட்சி இணையத்தில் கசிந்து வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு லியோ படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டால் அவை உடனடியாக நீக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

லியோ படக்குழு

இந்த நிலையில் லியோ படப்பிடிப்பு தளத்தில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு அரங்கில் கூடுதல் பாதுகாப்பு போட்டு உள்ளே வருபவர்கள் செல்போன் மற்றும் கேமரா ஏதேனும் வைத்து உள்ளார்களா என்று பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com