ஜப்பான் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஜப்பான் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
Published on

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'ஜப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இதில் சூர்யா மற்று சிவகுமார் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com