நம்மை காப்பாற்ற இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் ராஜா - செல்வராகவன் நெகிழ்ச்சி

இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டி வருகிறார்.இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நம்மை காப்பாற்ற இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் ராஜா - செல்வராகவன் நெகிழ்ச்சி
Published on

அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது.

இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பிறந்தநாள் விழா இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.

இளையராஜா -செல்வராகவன்

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் செல்வராகவன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "காலையில் எழுந்தால் ராஜா. குளிக்கும் போது ராஜா. வேலைக்கு செல்லும் போது ராஜா. மதிய உணவு ராஜா. மாலை வந்தால் ராஜா. இரவு வந்தால் ராஜா. தூங்கும் முன் ராஜா. சோகம் மற்றும் மகிழ்ச்சிக்கு ராஜா. இப்படி வாழ்க்கை என்னும் வலைப்பின்னலில் நம்மை காப்பாற்ற இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் ராஜா. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com