ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்சில் நடித்த தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

95-வது ஆஸ்கர் விருதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணக் குறும்படமாக தேர்வானது.இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்சில் நடித்த தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை பெற்றது. தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையே இந்த தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம். இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com