சென்னை-மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்த பிரபலங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியை திரைப்பிரலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர்.
சென்னை-மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்த பிரபலங்கள்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியை திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர். அதன்படி நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ், நடிகைகள் நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com