'லியோ' பாடலின் ரெக்கார்டிங் வீடியோ வெளியிட்ட அனிருத்

விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்திற்கு 'லியோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.'லியோ' படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
அனிருத் 
அனிருத் 
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ படக்குழு

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'லியோ' திரைப்படத்தின் டைட்டில் டீசர் பாடலின் ரெக்கார்டிங் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com