மீண்டும் இணையத்தை ஆக்கிரமிக்கும் விஜய்-திரிஷா புகைப்படம்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இப்படத்தின் மூலம் திரிஷா இணைந்துள்ளார்.
விஜய் - திரிஷா
விஜய் - திரிஷா
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

விஜய் - திரிஷா
விஜய் - திரிஷா

விஜய் - திரிஷா

இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புகாக படக்குழு அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீருக்கு சென்று வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் விஜய் - திரிஷா விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. விமானத்தில் பணிப்பெண்ணுடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படததை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com