பாஜகவில் இணையும் நடிகர் கிச்சா சுதீப்?

தமிழில் நான் ஈ மற்றும் விஜய்யின் புலி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கிச்சா சுதீப்.இவர் தற்போது பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிச்சா சுதீப்
கிச்சா சுதீப்
Published on

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
கிச்சா சுதீப்

கிச்சா சுதீப்

இந்நிலையில் கிச்சா சுதீப், இன்று இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது.

கிச்சா சுதீப்
கிச்சா சுதீப்

கிச்சா சுதீப்

தற்போது பாஜகவில் இணைய நடிகர் சுதீப் திட்டமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதீப் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com