விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சோனு சூட்... காரணம் என்ன தெரியுமா?

'ஜனநாயகன்' போன்றதொரு திரைப்படம் இணையத்தில் கசிவதைக் காண்பது மிகவும் மனவேதனை அளிக்கிறது.
விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சோனு சூட்... காரணம் என்ன தெரியுமா?
Published on

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு கண்டனமும், படக்குழுவுக்கு ஆதரவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல இந்தி நடிகர் சோனு சூட் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

'ஜனநாயகன்' போன்றதொரு திரைப்படம் இணையத்தில் கசிவதைக் காண்பது மிகவும் மனவேதனை அளிக்கிறது. ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தேவைப்படும் உறக்கமற்ற இரவுகள், பல ஆண்டுகால உழைப்பு மற்றும் பேரார்வம்... இவற்றை அதில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும். அது அவர்களுக்குத் தங்கள் குழந்தையைப் போன்றது.

திரைப்படத் திருட்டு என்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல; அத்திரைப்படத்தின் பின்னால் இருக்கும் ஒவ்வொரு கலைஞரையும் தொழில்நுட்பக் கலைஞரையும் முற்றிலும் அவமதிப்பதாகும். இதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விஜய்க்கு ஆதரவாக நிற்கிறேன். சினிமாவை மதிப்போம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com