விஜய்யின் 'பஞ்ச்' வசனத்தைப் பகிர்ந்து சத்யராஜூக்கு பதிலடி கொடுத்த சிபிராஜ்

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசார களமிறங்கிய நடிகர் சத்யராஜ், விஜய்யை கடுமையாக தாக்கி பேசினார்.
விஜய்யின் 'பஞ்ச்' வசனத்தைப் பகிர்ந்து சத்யராஜூக்கு பதிலடி கொடுத்த சிபிராஜ்
Published on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளுமே பிரசார களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களமிறங்கி இருக்கிறார்.

இதற்கிடையில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசார களமிறங்கிய நடிகர் சத்யராஜ், விஜய்யை கடுமையாக தாக்கி பேசினார். குறிப்பாக 'தலைவா' பட பிரச்சினையின்போது விஜய் எப்படி இருந்தார்? என்பதையும் நடித்துக் காட்டினார்.

இந்த சூழலில் சத்யராஜின் மகனும், நடிகருமான சிபிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு கவனம் ஈர்த்தார்.

அதில்,"உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்" என விஜய் சொன்ன வரிகளை குறிப்பிட்டிருந்தார்.

விஜய்யின் தீவிர ரசிகரான சிபிராஜின் இந்த பதிவு, சத்யராஜின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அமைந்திருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com