டீ குடிக்கப் போலாமா...! தலை சுற்ற வைக்கும் ஷில்பா ஷெட்டி ஓட்டல் விலைப்பட்டியல்

ஓட்டலில் புகை போன்ற அமைப்பு, நீச்சல் குளம், காடு போன்ற இடங்கள் டி.ஜே. உடனான பிரதான பார் மற்றும் தனிப்பட்ட உயர்தர உணவு சாப்பிடும் பகுதி உள்ளது.
டீ குடிக்கப் போலாமா...! தலை சுற்ற வைக்கும் ஷில்பா ஷெட்டி ஓட்டல் விலைப்பட்டியல்
Published on

திரை உலகில் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான மும்பையில் உள்ள பாஸ்டின் உணவகம் மிகவும் பிரபலமானது. பாலிவுட் நட்சத்திரங்களும், பெரும் பணக்காரர்களும் உணவு சாப்பிடவும் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் ஒரு முக்கிய இடமாக இது இருந்து வருகிறது.

இந்த உணவகத்தின் ஒரு இரவுக்கான வருவாய் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை உள்ளது என்ற தகவலை சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த ஓட்டல் உணவுகளின் விலையை கேட்டால் தலை சுற்றுகிறது ஜாஸ்மின் ஹெர்பல் டீ ரூ.920, இங்கிலீஷ் ப்ரேக்பாஸ் டீ ரூ.360, ஒரு பாட்டில் டோம் பெரிக் னான் ப்ரூட் ரோஸ் ஷாம்பெயினின் விலை ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 500, மிளகாய் பூண்டு நூடுல்ஸ் ரூ.675, சிக்கன் புரிடோக்களின் விலை ரூ.900 என பல்வேறு உணவு பொருள்களின் விலைப்பட்டியல் வெளியாகி இருக்கிறது.

ஓட்டலில் புகை போன்ற அமைப்பு, நீச்சல் குளம், காடு போன்ற இடங்கள் டி.ஜே. உடனான பிரதான பார் மற்றும் தனிப்பட்ட உயர்தர உணவு சாப்பிடும் பகுதி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com