நாளை மறுதணிக்கை - முடிவுக்கு வருமா ஜன நாயகன் இழுபறி?

நாளை ஜன நாயகம் படம் மீண்டும் மறுதணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.
நாளை மறுதணிக்கை - முடிவுக்கு வருமா ஜன நாயகன் இழுபறி?
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், அரசியலுக்கு வந்தப்பின் அவர் திரையுலகில் நடிக்கும் கடைசித் திரைப்படம் இது என கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே. வி. என் புரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.

முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜன.9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை.

மார்ச் 9 அன்று நடக்கவிருந்த மறுதணிக்கையும் (Re-censor), அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை மறுஆய்வு குழு படத்தை பார்க்கிறது. ஒருவேளை நாளையும் மறுதணிக்கை நடக்காவிட்டால் மார்ச் 19ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே அமேசான் நிறுவனம், தான் ஒப்பந்தம் செய்த ஓடிடி உரிமத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com