Rajinikanth | தலைவர் 173 ஷூட்டிங் - வெளியான புது தகவல்!

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Rajinikanth | தலைவர் 173 ஷூட்டிங் - வெளியான புது தகவல்!
Published on

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர் அவரது விலகலை தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இது ரஜினிகாந்தின் 173-வது படமாகும். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஹாலிவுட் படமான `தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், ரஜினிகாந்த் இதில் டெய்லராக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் "தலைவர் 173" திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் பசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், ஷோபனா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் நடிகை ஷோபனா கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் நடிப்பதாக தகவல்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com